Translate

Saturday, October 1, 2016

டிரங்குப் பெட்டியிலிருந்து

டிரங்குப் பெட்டியிலிருந்து  இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் 

சிற்றிதழ் எண்  : 1

ஆழி  காலாண்டிதழ் 

ஆசிரியர்  : திரு.ஆழி வீரமணி 
முதனை  கிராமம் .
விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் .



சாதாரண விவசாயக் குடுமபத்தில் பிறந்த ஆழி வீரமணி அவர்கள் கல்லூரி காலத்திலேயே இலக்கிய ஆர்வம் கொண்டு களம் புதிது ஆசிரியர் திரு.கரிகாலன் அவர்களின் வழிகாட்டுதலுடனும், மறைந்த பேராசிரியர் திரு.வே.சபாநாயகம் அவர்களின் அறிவுரைகளுடனும் 15.08.2005ம் நாளில் விருத்தாசலம்  திரு.கரிகாலன் அவர்கள் இல்லத்தில் வே.சபாநாயகம் அவர்களால் முதல் இதழ்  வெளிப்பட்டதாக தன் இனிய நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
இதழ் ஒவ்வொன்றையும் வெளிக் கொண்டுவரும்போது பிரசவ வேதனையைப் போன்ற நிலை தான் அடைந்தததாகக் கூறினார். ஒரு முறை தன கல்லூரி படிப்பிற்க்காக கிடைத்த அரசு உதவித் தொகையைக் கொண்டு இதழ் வெளியிட்டதாக தெரிவித்தார். இருந்தாலும் இதழ் வெளியாகி வாசகர்களிடம் இருந்து வரும் கடிதங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியை உண்டாக்கி அடுத்த இதழுக்காகன முன்னெடுப்பை உண்டாக்கும் என தன்  நினைவை பகிர்ந்து கொண்டார்.
6 இதழ்கள் தான் வெளி வந்த போதும் அறிய பல சாதனைகளை செய்திருக்கின்றது. இலக்கிய பெருந்தகை பேராசிரியர் வே.சபாநாயகம் அவர்களே பாராட்டி கடிதம் எழுதி இருக்கின்றார் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
வேறு ஒரு பதிவின் போது திரு.ஆழி வீரமணி அவர்கள் குறிப்பிட்டதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
 தன் பக்கத்து ஊர் குப்பநத்தத்தைச் சேர்ந்த நண்பர் திரு. சிவா [எ] இளந்திரையன் நடத்திய " ஆவாரம் பூ " என்ற சிற்றிதழை படித்த பிறகு தான் நாமும்  ஒரு சிற்றிதழ் துவங்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாக அவர் பதிவிட்டிருந்ததை  இங்கு நினைவு கூறுகின்றேன்.
இந்த இதழ் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும் சிறுகதை,கட்டுரை, குறும்பட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்துள்ளது.
சோகமான செய்தி என்னவென்றால் ஆழி அவர்களிடம் 2 இதழ்களின்  பிரதி மட்டும் தான் இருக்கிறது என்பது தான். அவற்றை பி.டி.எப். ஆக  மாற்ற வேண்டியிருக்கின்றேன். அப்படி கிடைக்கும் பட்சத்தில் வாசகர்களுக்கும் அனுப்ப இயலும். இந்த  இதழின் பிரதிகள் நண்பர்களிடத்தில் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டுகின்றேன்.
இத்தனை சிறப்புமிக்க " ஆழி " சிற்றிதழை வெளியிட்டமைக்காகவும், என் வேண்டுகோளை ஏற்று அதன் பிரதிகளை அனுப்பி தந்தமைக்கு என் இதயம் நிறைந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் ஆழியாருக்கு உரித்தாக்குகின்றேன்.
நண்பர்களே இது போன்று வெளி உலகுக்கு தெரியாமல் டிரங்குப் பெட்டிக்குள் புதைந்து கிடைக்கும் சிற்றிதழ்களின் விபரமிருந்தால் உடன் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
உங்கள்  கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
நன்றி. வணக்கம்.
கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி, 01.10.2016.

No comments:

Post a Comment