Translate

Saturday, November 12, 2016

புதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்

புதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்


வணக்கம்  நண்பர்களே.

இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண்ணன் அவர்களின் பிறந்த நாள். அவரை நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் எழுதிய "சரஸ்வதி காலம்" என்ற புத்தகத்தை இணையத்தின் மூலம் படிக்கத் துவங்கினேன்.

உள்ளே அத்தனையும் பொக்கிஷங்கள். மணிக்கொடி காலம் முதல் சரஸ்வதி காலம் வரை கட்டுரைகள் நீள் வடிவம் பெறுகின்றன. மணிக்கொடி துவங்கி ஒவ்வொரு ஆண்டாக வெளிவந்த சிற்றிதழ்களை எல்லாம் வரிசைப்படுத்தி இலக்கிய உலகை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் சிற்றிதழ்களின் பரிணாம வளர்ச்சியை அவர் வெளிக் கொண்டு வந்துள்ள விதம் மிகச் சிறப்பாக  அமைந்துள்ளது. புதிதாக இந்த துறையில் நாட்டம் கொண்டு படிப்பவர் கூட எளிதாக புரிந்து கொள்ளும் எழுத்து நடையில் உள்ளது.
அந்த இதழ்களையெல்லாம் இங்கே நான் வரிசைப்  படுத்துகின்றேன்.

1. மணிக்கொடி
2. சூறாவளி
3. கிராம ஊழியன்

4.பாரத தேவி
5. திருமகள்
6. ஹனுமான்                                     
7. சக்தி
8. மனிதன்
9. முல்லை
10.குமரி மலர்
11.நவசக்தி
12.சந்திரோதயம்
13.சிந்தனை
14.தேனீ
15.காதம்பரி
16.சாந்தி
17.சரஸ்வதி.

இன்னும் பலப் பல. இத்தனையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இருக்க முடியாது. அந்த இதழ்கள் இலக்கிய வெளியில் ஆற்றியுள்ள சாதனைகள் ஈடு இணையில்லாதது. அத்தகைய பொக்கிஷங்கள் புதையுண்டு போக விடலாமா.

இந்த இதழ்களை வைத்திருக்கும் நண்பர்களே, உங்கள் பொற்பாதம் தொட்டு வேண்டுகின்றேன்,  இந்த இதழ்களை பி.டி.எப். பிரதியாக மாற்றி வெளியிடுங்கள். உலகம் முழுக்க தமிழ் வாசகர்களுக்கு கொண்டு செல்லுவோம். அதற்கு சிற்றிதழ் உலகம் தளம் உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

உங்களிடம்  எத்தனை இதழ்கள் உள்ளதோ அதை மாற்றுங்கள். அதற்கு காலத்தால் அழிவில்லாமல் இருக்கும். உங்கள் புகழை உலகம் முழுதும் கொண்டு செல்லும். விரைவில் சிற்றிதழ்களின் பி.டி.எப். ஹப் ஆகா மாற இருக்கும் சிற்றிதழ்கள் உலகம் தளம் உங்கள் பெயருடன் உலக வாசகர்களுக்கு கொண்டு செல்லும் என்ற உத்திரவாதத்தை அளிக்கின்றேன்.

வாருங்கள் நண்பர்களே, நம் இலக்கிய பொக்கிஷங்கள் புதையுண்டு போகாமல் புற வெளிக்கு கொண்டு வருவோம். அதன் புகழை உலகெங்கும் கொண்டு செல்வோம். 















படங்கள்: பொள்ளாச்சி  நசன் அய்யா அவர்களுக்கு நன்றி. 
கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.
12.11.2016.



1 comment:

  1. பெரும்பான்மையான சிர்றிதழ்களை பொள்ளாச்சி நசன் பிடிஎஃப் ஆக்கி வைத்திருக்கிறார்.ஆனால் அவற்றை வலை ஏற்றவில்லை. அவர் சொல்லும் காரணம் சர்வெர் crash ஆகிறது என்பது. அவரிடம் பேசிப்பாருங்கள். அவர் வலையேறினாலே பெரும்பான்மையான இதழ்களை இலக்கிய வாசகர்கள் படிக்க முடியும்.

    ReplyDelete