Translate

Friday, December 30, 2016

டிரங்குப் பெட்டியிலிருந்து - தலைச் சோறு

டிரங்குப் பெட்டியிலிருந்து - தலைச் சோறு
தலைச் சோறு சிற்றிதழ்
இணை ஆசிரியர்: சிவ.விஜயபாரதி
சோழபுரம், கும்பகோணம்.

வணக்கம் நண்பர்களே.
கடாரம் கொண்ட ராஜேந்திர சோழனின் வரலாற்றில் முக்கிய இடமாகத் திகழும், கும்பகோனம் அருகில் உள்ள சோழபுரம் மண்ணிலிருந்து, மண்வாசனை குறையாமல், தமிழகம் முழுவதுமான இலக்கிய வெளியில், வாசகர்களுக்கு இலக்கியச் சோறு வழங்க  வந்த சிற்றிதழ் தான் " தலைச் சோறு " என்ற பெருமைக்குரியது இந்த சிற்றிதழ்.  

Wednesday, December 28, 2016

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்

பல்லவி சிற்றிதழ்.
ஆசிரியர் : 
திரு.பல்லவி குமார் [எ] சீர்காழி எஸ்.குமார்
சீர்காழி.

வணக்கம் நண்பர்களே.
சீர்காழியிலிருந்து,  பல்லவபுரத்து இளவரசியின் அழகுக்கும், அறிவிற்கும் சற்றும் குறைவில்லாத வகையில் தமிழக இலக்கிய வெளியில் 1986 களில் வெற்றி முரசு கொட்டிய சிற்றிதழ் தான்            " பல்லவி ".  இந்த இதழ் ஒரு கூட்டுக்  குழுவாக திரு.பல்லவி குமார் அவர்கள் தலைமையில் வெளி வந்துள்ளது.

Friday, December 23, 2016

சிறுகதைப் போட்டி முடிவுகள்

சிறுகதைப்  போட்டி முடிவுகள்

சிற்றிதழ்கள் உலகம் சிறுகதைப்  போட்டி முடிவுகள்.

வணக்கம் நண்பர்களே. 
சிற்றிதழ்கள் உலகம் நடத்திய சிறுகதை போட்டிக்கு 15 கதைகள் வர பெற்றன. அந்த கதைகளின்,  எழுதியவர்களின் பெயருக்கு பதிலாக எண்  வழங்கப்பட்டு ஒப்புக் கொண்ட 4 நடுவர்களின்   இமெயிலுக்கு அனுப்பப்பட்டது. அதில் கவிஞர் ஜெய தேவன் அவர்களின் கணினி பழுதடைந்த காரணத்தால் அவர் பங்கேற்க்கவில்லை. மற்ற 3 நடுவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் நம்முடைய பணி  என்பது  ஒருங்கிணைப்பு மட்டும் தான். 

கடும் போட்டி. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் நழுவிப்  போகும் நிலை. இந்த முடிவுகள் எந்த எழுத்தாளரையும் குறைத்து மதிப்பிடக் கூடியது இல்லை. கடும் போட்டிக்கிடையில் ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று முதலிடத்தை பெறுபவது  திருமதி.உமா குமரி உத்ரா [எ ] உமா மஹேஸ்வரி அவர்கள் எழுதிய  "தண்ணீர்" என்ற சிறுகதை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் திருமதி.உமா அவர்களே. அவருக்கு முதல் பரிசாக சிற்றிதழ் ஒன்றுக்கு ரூ .300/= சந்தா  செலுத்தப்படும். இந்த சிறுகதை மகா கவி சனவரி மாத சிற்றிதழில் வெளிவர இருக்கிறது. 

Wednesday, December 21, 2016

சிற்றிதழ் வாசகர் விமர்சனம்

சிற்றிதழ் வாசகர் விமர்சனம் 
பெயல் ஆய்விதழ் 
ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் 
கோவை.

வணக்கம் நண்பர்களே.
இதழியல் துறையில் ஒரு புதிய சகாப்தமாக வெளி வருகிறது பெயல் ஆய்விதழ். ஆய்வுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வரும் இதழ். டாகடர்.செந்தில்குமார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பல வல்லுநர்களை குழு உறுப்பினர்களாக கொண்டு கோயம்புத்தூரிலிருந்து பீடு நடை போடும் இதழ் தான் பெயல். 

Thursday, December 15, 2016

சிற்றிதழ் விமர்சனம் - 4

சிற்றிதழ் விமர்சனம் - 4
அம்பறா கவிதையிதழ் 
ஆர்ப்பரிக்கும் கவிதையிதழ்

வணக்கம் நண்பர்களே .

சேலம் உருக்காலை  மன மகிழ் முத்தமிழ்  மன்றத்தின் இலவச வெளியீடாக வரும் சிற்றிதழ் தான் அம்பறா. இது ஒரு ஆர்ப்பரிக்கும் கவிதையிதழ் என்று கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அத்தனையும் கவிதைகள். அதிலும் குறிப்பாக மன்ற உறுப்பினர்களின் கவிதைகள். 17 கவிதைகள். அத்தனையும் முத்துக்கள். ஒன்றை படிக்க ஆரம்பித்து  நிறுத்த முடியாமல் அத்தனையும் படித்து முடித்து தான் நிறுத்தினேன். 

Sunday, December 4, 2016

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

சிற்றிதழ் எண் : 3.

கலைச் சோலை இலக்கிய இதழ்
காலாண்டிதழ்.
ஆசிரியர் : திருமலை சோமு
சென்னை.

சிற்றிதழ் உலகில் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்படி ஒரு நிகழ்வாக நடந்தது தான் கலைச் சோலை இலக்கிய இதழின் வெளியீடு என்றால் மிகையாகாது. ஆம் நண்பர்களே.