Translate

Sunday, May 7, 2017

ஒரு சிற்றிதழ் படைப்பாளி உருவான வரலாறு

ஒரு சிற்றிதழ் படைப்பாளி உருவான வரலாறு.
ஒரு சாதாரன மாணவன் ஒரு சாமான்ய எழுத்தாளனான கதை.
மறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு.
எழுத்தாளர் திரு.பாட்டாளி,
திருச்சி.

வணக்கம் நண்பர்களே.

முக நூலில் என்னுடைய சிற்றிதழ்கள் தேடும் படலத்தில்,  எப்போதும் பதிவுகளின் கீழ் ஏதாவதொரு சிற்றிதழ் பெயரை தொடர்ந்து பதிவு செய்து வரும் திரு.பாட்டாளி அவர்களின் பதிவுகள் என்னை மிக கவர்ந்தன. அந்த பதிவுகளுக்கான சிற்றிதழ் முகப்புப் படங்கள் கேட்டு வாங்கி இருக்கின்றேன். ஒரு முறை நான் கோபித்துக் கொண்டது கூட உண்டு. 






ஏன் இப்படி சிற்றிதழ்களின் படம் இல்லாமல் பதிவு செய்து இன்றைய வாசகனை ஏமாற்றுகின்றீர்கள். படத்தையும் பதிவு செய்தால் தானே, புதிய வாசகர்களுக்கு சிற்றிதழ்கள் மீது ஈர்ப்பு அதிகமாகும் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கு அவர் தன்னிடம் கைப் பேசி தான் இருக்கிறது. அதில் பதிவது சிரமமாக  உள்ளது என்று கூறினார். ஓரிரு முறை தன் நண்பர்கள் கை பேசி மூலம் எனக்கு அனுப்பி உள்ளார்.

ஒரு சாதாரண மாணவன் எப்படி ஒரு சாமான்ய எழுத்தாளனாகின்றான் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சாம். அதற்கு சிற்றிதழ்கள் எப்படி வழி கோலின என்பதை அவர் வாயாலே இல்லை எழுத்தாலே கேட்கும் போது, என் உடலெங்கும் ஒரு புல்லரிப்பு. ஒரு ஆதங்கம். ஒரு எதிர்பார்ப்பு. ஆம். நம் சிற்றிதழ்கள் உலகம் இதழ் குறித்தும் யாராவது ஒரு இளம் எழுத்தாளன் இப்படிக் கூற்னான் என்றால், அன்று தான் என் சிற்றிதழ் செயல்பாட்டின் பயனடைவேன். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சொல்லும் என்ற நம்பிக்கை நிச்சயம் உள்ளது.




நண்பர்களே, திரு.பாட்டாளி அவர்கள் சிற்றிதழ்கள் உலகம் 3வது இதழில் எழுதிய கட்டுரையை அப்படியே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.  படித்து மகிழுங்கள். வாருங்கள் கதை, கவிதை, கட்டுரை எழுதுவோம். சாதனை படைப்போம்.

கிருஷ்.ராமதாஸ்,
08.05.17.

1 comment:

  1. தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்.

    ReplyDelete